தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் சுற்றித்திரியும் காட்டுயானை – வனத்துறையினர் எச்சரிக்கை

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, சிறுத்தை, காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நட மாட்டமும், அட்டகாசமும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப் பாக அவைகள் இரவு, பகலாக கிராமம், சாலை மற்றும் தேயிைல தோட்டத்திற்குள் வந்து மக்கள், தொழிலாளர்களை அச்சுறுத்துவதுடன் தாக்கும் அபாயம் நிலவுகிறது. இதனால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதற்கிடையே சமவெளி பகுதிகளில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததால் காட்டுயா னைகள் இடம்பெயர்ந்து வருகின்றன.

குட்டியுடன் காட்டுயானை…

அதன்படி குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சமவெளி பகுதிகளில் இருந்து வந்த 11 காட்டு யானைகள் கூட் டம் குன்னூர் காட்டேரி பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரிந்து வந்தது. இந்த கூட்டத்தில் இருந்து குட்டியுடன் பிரிந்த காட்டு யானை ஒன்று தற்போது கிளண்டேல் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகிறது.

இதையறிந்த வனத்துறையினர், சம்பந்தப்பட்ட தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது தேயிலை தோட்டத்தில் காட்டுயா னைகள் நடமாட்டம் உள்ளதால் பணிக்கு செல்ல வேண்டாம். காட்டுயானை இருக்கும் பகுதிக்கு அருகே செல்லக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கூட்டத்தில் இருந்து குட்டியுடன் பிரிந்த காட்டுயானை நடமாட்டத்தை கண் காணித்து. மீண்டும் கூட்டத்தில் சேர்க்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source link