நிர்மல் குமார் பேச்சு
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி நிர்மல் குமார் சமீபத்தில் தேர்தலுக்கு பின் அதிமுக என்ற கட்சியே இருக்காது என பேசியிருந்தார். எடப்பாடி பழனிசாமி வேற வழியில்லாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். தேர்தலுக்கு பின்பு அதிமுகவை பாஜகவுடன் இணைத்து விடுவார்கள் என விமர்சனம் செய்திருந்தார். பாஜக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் பயணித்து தற்போது தவெகவில் இணைந்துள்ள நிர்மல் குமார் செய்த இந்த விமர்சனம் அதிமுகவினர் இடையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ராஜேந்திர பாலாஜி பதிலடி
இதனையடுத்து இணையத்தில் அவரின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்து வந்தனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நிர்மல் குமார் எனது நண்பர் தான். தேர்தலுக்கு பின் மீண்டும் அவர் அதிமுகவுக்கு வந்து விடுவார் என பதிலடி கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பைத்தியம் பிடிச்சு பேசுறவனுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியுமா? அதிமுகவை எவன் எவனோ அழிக்கனும் பார்த்தான். முடியலை. விஜய் வந்து அழிச்சுட போறாரா.
மீண்டும் அதிமுகவுக்கு வருவார்
நிர்மல் குமார் இங்கதானா இருந்தார். தவெகவில் ஏதாவது கிடைக்குமா சொல்லி போயிருக்காரு, ஆனால் எதுவுமே கிடைக்காது. நிர்மல் குமார் எவ்வளவு வேகமா அதிமுகவுக்கு வர்ற போறாருன்னு பாருங்க. தவெக வேட்பாளர்கள் எல்லாம் இன்ஸ்டாகிராம் ஓட்டு கேட்டுட்டு இருக்காங்க. டெபாசிட் கூட வாங்க முடியாது. விஜய்யும் வெயில்ல மண்டை சூடு தாங்காமல் திமுக, தவெக இடைல போட்டின்னு சொல்லிட்டு இருக்காரு என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் ராஜேந்திர பாலாஜி.
திமுக – தவெக இடையில் மட்டுமே போட்டி
தவெக தலைவர் விஜய்யும், அக்கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகளும் தொடர்ச்சியாக இந்த தேர்தலில் திமுக, தவெக இடையில் தான் போட்டி என கூறி வருகின்றனர். அதிமுக என்ற கட்சியே கிடையாது. போட்டியில் இல்லாத அவர்களை விமர்சிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை எனவும் தெரிவித்து கொண்டிருக்கின்றனர். ஆனால் திமுக எங்களுக்கு எதிர்கட்சி அதிமுக மட்டுமே. அவர்களுக்கு தலைமையிலான என்டிஏவுடன் தான் போட்டி என கூறி வருகிறது.
என்டிஏ கூட்டணியில் விஜய்
முன்னதாக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியில் தவெகவை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்தது. இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியை பெரியளவில் அதிமுகவை சார்ந்தவர்கள் விமர்சனம் செய்யாமல் இருந்தனர். தவெகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் முடிவினை எடுத்தது.
இபிஎஸ் விமர்சனம்
இதனையடுத்து தவெகவை விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர் அதிமுக நிர்வாகிகள். அந்த வகையில் சமீபத்தில் பரப்புரையில் கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை கடுமையாக விமர்சித்தார் இபிஎஸ். உலகத்தில் எங்கயும் நடக்காததை போன்று உயிரிழந்தவர்கள் குடும்பத்தை நேரில் அழைத்து ஆறுதல் சொல்லி இருக்கிறார். சினிமா வேற, அரசியல் வேற. சினிமாவை நம்பி யாரும் ஏமாற வேண்டும் என கடும் விமர்சனங்களை இபிஎஸ் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
