தேர்தல் என்று வந்துவிட்டால் இருமுனைப் போட்டி தான்

தேர்தல் என்று வந்துவிட்டால் அது இருமுனைப் போட்டியாகத்தான் இருக்கும். ஒன்று ஆளும் திமுக, மற்றொன்று அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என்று அண்ணாமலை கூறி உள்ளார்.

ஊட்டியில் அண்ணாமலை, சோதனை நீலகிரி மாவட்டம், ஊட்டி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று காலை கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வந்தார். ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கினார். அங்கு பறக்கும் படையினர், ஹெலிகாப்டரை சோதித்தனர்.

இதனையடுத்து அண்ணாமலை கூறியதாவது:ஊட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக, பாஜக வேட்பாளராக போஜராஜன் களத்தில் நின்று கொண்டிருக்கிறார். கடந்த முறை சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதன் பிறகு ஐந்து ஆண்டு காலம் மிக கடுமையாக உழைத்திருக்கிறோம். அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் எல்லாம் முழு ஒத்துழைப்பை நல்கி, இந்த முறை நிச்சயமாக ஊட்டியில் போஜராஜனுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று முழுமையாக நம்புகிறோம்.

திமுக கூட்டணியில் பிளவோடு காங்கிரஸ்மக்கள் தன்னெழுச்சியாக காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு முறை இங்கு வாய்ப்பு கொடுத்தனர், ஆனால், எந்தவிதமான அடிப்படை வேலையும் செய்யவில்லை. மறுபடியும் திரும்பத் திரும்ப அதே கட்சி வந்து எந்த வேலையும் செய்யாமல், இன்னைக்கு திமுக கூட்டணியில் பிளவோடு இருக்கிறது. எனவே, இந்த முறை வெற்றி வாய்ப்பு எங்களுக்குத் தான். ஏன் என்றால் மக்களுடைய அன்பு எங்கள் பக்கம்தான் இருக்கிறது. போஜராஜன் மிகச் சிறந்த ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஊட்டிக்கு வருகிறார். எங்களுடைய மூத்த தலைவர்களும் ஊட்டிக்கு வருகின்றனர்.

தமிழகத்தில் எழுச்சி புதுச்சேரியில் 89% வாக்குப்பதிவு நடந்துள்ளது. அசாமிலும் மிக அதிகப்படியான வாக்குப்பதிவு. காரணம் எஸ்ஐஆர் மூலமாக வாக்குகள் நீக்கப்பட்டிருப்பது இயற்கையாகவே வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. புதுச்சேரியிலும், அசாமிலும் ‘ப்ரோ-இன்கும்பன்சி’ அதாவது ஆளுகின்ற அரசு நமக்கு மீண்டும் வேண்டும். அசாமில் என்டிஏ பாரதிய ஜனதா கட்சி அரசு மீண்டும் வேண்டும். புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான என்டிஏ ஆட்சி மீண்டும் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார். இது தமிழகத்திலும் எதிரொலிக்கும். மே 4ஆம் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்கும் போது தமிழகம் முழுவதும் ஒரு எழுச்சியான சூழல் உருவாகும்.

இருமுனைப் போட்டி தான் தமிழக வெற்றி கழகம் மற்றும் சீமான் களத்தில் இருந்தாலும், தேர்தல் என்று வந்துவிட்டால் அது இருமுனைப் போட்டியாகத்தான் இருக்கும். ஒன்று ஆளும் திமுக, மற்றொன்று அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. எடப்பாடி பழனிசாமி கருத்தை முதல்வர் ஸ்டாலின் தவறான ஒரு சூழலில் பேசுகிறார். கனிமொழி எங்களை யாராவது எதிர்த்துப் பேசினால் ‘மலர் வளையம்’ வைப்போம் என்று கூறுகிறார், இது மிரட்டல் இல்லையா? மேலும், நட்சத்திரப் பேச்சாளராக இருக்கும் அவர் இதுவரை திமுகவின் ஒரு கூட்டத்தில் கூட பங்கேற்கவில்லை. அந்த ஆடியோவில் அவர் முதல்வரின் திறன் பற்றியும், 2ஜி வழக்கு பற்றியும் பேசியுள்ளது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். இது எங்களுடைய பிரச்சாரத்துக்கு இன்னும் வலுசேர்த்துள்ளது.இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.

Source link