புதுச்சேரி,
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்காக மொத்தம் 1,099 ஓட்டுச் சாவடிகள் அலுவலர்கள், அமைக்கப்பட்டிருந்தது. ஓட்டுச் சாவடிகளில் தலா ஒரு தலைமை தேர்தல் அலுவலர், 3 ஓட்டுப் பதிவு பல்நோக்கு ஊழியர் மற்றும் ஒரு ஓட்டுச்சாவடி அலுவலர் வாக்கு பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு ஓட்டுப் பதிவு முடிந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வேனில் ஏற்றும் போதே தேர்தல் ஆணையம் வழங்கும் மதிப்பூதியம் வழங்கப்பட்டது.
அதில் தலைமை தேர்தல் அலுவலருக்கு ரூ.3,500, ஓட்டுப்பதிவு அலுவலர் நிலை 1 -க்கு ரூ.3,000, ஒரு ஓட்டுப்பதிவு அலுவலர்கள் நிலை 2 மற்றும் நிலை 3-க்கு தலா ரூ.2,700-ம், பல்நோக்கு ஊழியருக்கு ரூ.1,200 மற்றும் ஓட்டுச்சாவடி அலுவலருக்கு ரூ.1500 வழங்கப்பட்டது.
இந்த பணத்தில் காலை சிற்றுண்டி மதிய உணவு வழங்கியதற்காக ரூ.300 முதல் ரூ.400 வரை பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால், 2 தொகுதிகளில் மட்டும், வாக்கு பதிவு பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப் பட்ட மதிப்பூதியத்தில் சாப்பாட்டிற்காக தலைமை அலுவலர் மற்றும் ஓட்டுப் பதிவு அலுவலர்களிடம் ஆயிரம் ரூ.1,000 பல்நோக்கு ஊழியரிடம் ரூ.500 பிடித்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பிற தொகுதிகளில் ரூ. 300 முதல் 400 சாப்பாட்டிற்கு பிடித்தம் செய்துள்ள நிலையில், 3 தொகுதிகளில் மட்டும் ரூ.1,000 பிடித்தம் செய்திருப்பது ஊழியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை வெளியே சொல்ல முடியாமல் ஊழியர்கள் வேதனையடைந்துள்ளனர்.
