தேர்தல் பிரச்சாரத்தில் நடந்த விஷயம்.. விஜய் எடுத்த திடீர் முடிவு.. தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.. என்ன பிளான்? – tvk vijay scheduled to hold advisory meeting with tvk executives and district secretaries at private hotel in nungambakkam

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்து கட்சி நிர்வாகிகள், தலைவர்கள், வேட்பாளர்கள் என அனைவரும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் 3 வது கட்சியாக உருவெடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் முதல் முறையாக தேர்தல் களம் காண உள்ளது.

மேலும், அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட உள்ளார். 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெக வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால், தமிழக வெற்றி கழகம் 233 தொகுதிகளில் மட்டும் தனித்து போட்டியிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே பல பிரச்சனைகள் மற்றும் சவால்களை சந்தித்து வருவதால், அனைத்து ஏற்பாடுகளையும் தவெக மிக கவனமாக செய்து வருகிறது. மேலும், விஜய்யும் தன்னுடைய வேட்பாளர்களை ஆதரித்து ஒவ்வொரு தொகுதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் பிரச்சாரம் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் சூழ்ந்தே காணப்படுகிறது.

இது ஒருபுறம் அக்கட்சியின் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாகவே இருந்தாலும், மறுபுறம் பிரச்சாரம் என்று வந்தாலே ஏதாவது ஒரு பிரச்சனையும் கூடவே சேர்ந்து வந்துவிடுகிறது. குறிப்பாக, விஜய் பிரச்சார வாகனத்தை இளைஞர்கள் பின்தொடர்ந்து வருவதால் பல விபத்துகள் அறங்கேறி வருகின்றன. பிரச்சார வாகனத்தை பின்தொடர வேண்டாம் என்று விஜய் பலமுறை எடுத்து கூறியும் இளைஞர்களும், தொண்டர்களும் கேட்டபாடில்லை. அதையும் மீறி பிரச்சார வாகனத்தை பின்தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இவை ஒருபுறம் இருக்க, விஜய் தங்கள் ஊருக்கும் வருவார் என்று ஆசையோடு பொதுமக்களும், தொண்டர்களும் காத்திருந்த வேளையில், ஒவ்வொரு பிரச்சாரத்தையும் விஜய் ரத்து செய்து வருகிறார். இதற்கு இடையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் வரும் 16 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் தவெக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2026 விஜய்யின் திட்டம் என்ன? விரிவான அலசல்…!

பிரச்சாரத்தின் போது வேட்பாளர்களுக்கு தவெக நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று விஜய்க்கு செய்து சென்றடையவே இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இக்கூட்டத்தில் இறுதிக்கட்ட தேர்தல் பணிகள் குறித்தும், அடுத்தக்கட்ட தேர்தல் பிரச்சாரங்கள் குறித்தும் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் விஜய் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source link