தேர்தல் முன் விஜய் புதிய ஸ்ட்ராட்டஜி.. தன்னார்வலர்களுக்கு அழைப்பு- அடுத்த கட்ட திட்டம் என்ன? – vijay invites volunteers to work alongside tvk functionaries for the 2026 assembly elections

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக களத்தில் திமுக, அதிமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்கள்.அந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜய் முதன்முறை தனித்து களமிறங்க உள்ளார். இதற்காக சென்னை, தூத்துக்குடி, மதுரை , திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தனது வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இதனைத் தொடந்து தென் மாவட்டங்களை குறிவைத்து பிரச்சாரத்தை தொடங்கினார்.

விஜய் தேர்தல் பிரச்சாரம்

அந்த வகையில்,காரைக்குடியில் பிரச்சாரம் மேற்க்கொள்வதற்காக திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த விஜய் சாலை மார்கமாக காரைக்குக்கு சென்றார். அப்போது தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அப்போது பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி சைக்கிளில் பிரச்சாரம் செய்தார். இதனால், அளவுக்கு மீறி கூட்டம் கூடியது. இதில் சிக்கிகொண்ட விஜய் பின்னர் பரப்புரை வாகனத்தில் பிரச்சாரம் செய்தார்.ஆனால், காவல்துறை உரிய நேரத்திற்கு விஜய் வரமுடியாததன் காரணமாக காரைக்குடியில் விஜய் பேசமால் சென்றார். அதனைத் தொடர்ந்து இன்று கடலூரில் பிரச்சாரம் செய்த இருந்த நிலையில் அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடலூரில் துணைமுதல் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்க்கொள்ள அனுமதி கேட்டிருந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் விஜய் பேச்சு…தாக்கம் ஏற்படுமா?

கடலூர் தவெக பிரச்சாரம் ரத்து

தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் திமுக ,அதிமுக கட்சிகள் தேர்தல் களத்தில் போட்டி போட்டுக் கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். விஜய் தொடர்ந்து பரப்புரை ரத்து செய்துவருவது அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும், ஒரு நாள் பரப்புரை செய்துவிட்டு 2 நாட்கள் விடுமுறை விடுவதாக விஜய் மீது விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.முதல்தேர்தலில் குறுகிய காலத்தில் தனது வேட்பாளர்களை எப்படி மக்கள் மனதில் நிலைநிறுத்த வைப்பார் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

இப்படியான சூழலில் விஜய் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்,தவெகவிற்கு வாக்கு சேகரிக்க தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது. மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

விஜய் தன்னார்வலர் அழைப்பு

தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள். அடுத்த பத்து நாள்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். நமது கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள். இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாநில மற்றும் அனைத்து நிலை மாவட்டக் கழக நிர்வாகிகள், நமது கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள். அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள். தன்முனைப்பற்ற தோழமை உணர்வோடு அனைவரும் வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள். இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை விளக்குங்கள். தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள்.ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்தப் போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!வாகை சூடும் வரலாறு திரும்புகிறது!நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம் என தெரிவித்துள்ளார்.

Source link