தேர்தல் 2026: தமிழகத்தை விடுங்க.. மேற்கு வங்கத்தில் பாஜக தேர்தல் அறிக்கையை பாருங்க.. அசத்தல் அறிவிப்புகள்! – west bengal election 2026 bjp manifesto amit shah releases

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் 2026: கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்கத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கட்டமாகவும் ஏப்ரல் 29 இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 தேதி நடைபெற உள்ளது. இதனால், பாஜக மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் போட்டிப் போட்டுக் கொண்டு தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் 2026

இதனை பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா வெளியிட்டார்.அப்போது பேசிய அவர், இன்று வெளியிடப்படும் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் வங்காளத்தை விரக்தியிலிருந்து மீட்டு நல்வழியைக் காட்டும். இது ஒரு வளர்ந்த இந்தியாவிற்கான செயல்திட்டத் தேர்தல் அறிக்கை என்று கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், ரவீந்திர ஜெயந்தி அன்று ஒரு புதிய வங்காளம் உருவாகும் என்றார். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் மொத்தம் 15 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு உள்ளது.

கோபத்தில் கண்டித்த விஜய்- இதுதான் விஜயின் யுக்தியா_

குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் முதல் விவசாயம், தொழில் வரை முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்தவர்களை கண்டறிந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் பாதுகாப்பை முன்னிறுத்தி ஊடுருவல்கள் இல்லாத நிர்வாகம் உருவாக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் பாஜக தேர்தல் அறிக்கை
  • மேற்கு வங்கத்தில் உள்ள பெண்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
  • இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்
  • வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் மூவாயிரம் ரூபாய் வழங்கப்படும்.குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை ஒவ்வொரு மாதமும் 3,000 வழங்கப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது.
  • அடுத்த ஐந்தாண்டுகளில் 1 கோடி மக்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளும் சுயசார்புக்கான வாய்ப்புகளும் உருவாக்கப்படும்
  • பெண்களின் பாதுகாப்பிற்காக ‘துர்கா சுரக்ஷா படை’ என்ற பெயரில் ஒரு சிறப்பு மகளிர் காவல் படைப் பிரிவு உருவாக்கப்படும்.
  • மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு வேலைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும்.
  • அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உறுதி செய்யப்படும்.
  • ஏழாவது ஊதியக் குழு அறிமுகப்படுத்தப்படும். காலிப் பணியிடங்கள் 45 நாட்களுக்குள் நிரப்பப்படும்.
  • குர்மாலி மற்றும் ராஜ்போங்ஷி ஆகிய மொழிகள் இந்திய அரசியல் அமைப்பின் 8வது கால அட்டவணையில் சேர்க்கப்படும்.
  • கடந்த 15 ஆண்டுகளில் திரிணாமூல் அரசின் ஆட்சியில் நிலவிய ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை எடுத்துரைக்கும் வகையில் ஒரு சிறப்பு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
  • விவசாயிகளுக்கு நியாயமான விலை நிர்ணயிக்கப்படும்.
  • நெல், உருளைக்கிழங்கு மற்றும் மாம்பழ சாகுபடிக்கு சிறப்பு அரசு உதவி வழங்கப்படும், மேலும் விவசாயிகளுக்கு பயிர்களுக்கு நியாயமான விலை உறுதி செய்யப்படும்.
  • மேற்கு வங்கத்தில் ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பாஜக திட்டங்களைச் செயல்படுத்துதல்
  • 6 மாதங்களில் பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படும்
  • மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து தேயிலை தோட்டங்களும் மீட்டெடுக்கப்படும்
  • வந்தே மாதரம் மேற்கு வங்க மாநிலத்தில் அமைக்கப்படும்.
  • வங்காளத்தில் நான்கு புதிய நகரங்கள் உருவாக்கப்பட உள்ளன.
  • போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு ரூ.15,000; ஊழல் காரணமாக வேலை இழந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பாஜகவின் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் கவனம் பெற்று உள்ளது.