தேவரகொண்டா-ராஷ்மிகா திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் லிஸ்ட் இணையத்தில் வைரல்..!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா. இருவருமே காதலித்து வந்தாலும், வெளிப்படையாக தங்களுடைய காதலை அறிவிக்காமல் மறைத்து வந்தனர். இருந்தாலும் இவர்களின் காதல் பற்றிய செய்திகள் அவ்வபோது வெளியாகி வந்தது.

இந்த நிலையில், வரும் பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி ஐதராபாத் நகரில் பிரம்மாண்டமான வரவேற்பு (ரிசப்ஷன்) நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

திருமண நிகழ்வு நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் முன்னிலையில் எளிமையாக நடைபெறும் என்றும், பிரபலங்கள் பெரும்பாலும் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் ரிசப்ஷனில் பங்கேற்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் பிப்.26 ஆம் தேதி உதயப்பூரில் நடைபெறவிருக்கும், திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி, இயக்குனர்கள் சுகுமார், சந்தீப் ரெட்டி வங்கா, ராகுல் சங்க்ரித்யான், நடிகர்கள் சல்மான் கான், விக்கி கௌஷல், அல்லு அர்ஜுன், நடிகைகள் வர்ஷா பொல்லம்மா, கிரிதி சனோன், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த திருமண விவகாரம் தொடர்பாக இருவரின் தரப்பிலிருந்தும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link