சென்னை,
தைப்பூசத்தை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறன. அந்த வகையில்அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு நாளை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி, நாளை காலை 10.20 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும் ரெயில், 10.40 மணிக்கு திருத்தணி சென்றடையும். மறுமார்க்கமாக 10.50 மணிக்கு திருத்தணியில் இருந்து புறப்படும் ரெயில், 11.15 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். அதேபோல, திருத்தணியில் இருந்தும் அரக்கோணத்துக்கு சிறப்பு மெமோ ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
