தொகுதி கிடைக்காத அதிருப்தி.. தேர்தலுக்கு பிறகு விலகுகிறாரா அண்ணாமலை? முக்கிய புள்ளியிடம் பேசிய வீடியோ! – annamalai is set to leave the bjp party following the assembly elections

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை கட்சியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

annamalai(புகைப்படங்கள்Samayam Tamil)
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள எண்ணி 20 நாட்கள் கூட இல்லை. அதே போல வேட்பு மனு தாக்கல் முடிவடையவும் இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளன. அதனால் மற்ற கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆனால் பாஜகவோ தமிழகத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்காமலேயே இருந்தது. இதற்கு ஒரே காரணம் அண்ணாமலை தான் என்று தகவல் வெளியானது.

பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதம்

இந்த முறை கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ,கிணத்துக்கடவு ஆகிய நான்கு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் நிற்க அண்ணாமலை நினைத்திருந்ததாகவும், ஆனால் அதிலும் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் தான் அதிக வாக்குகள் பெற்றிருந்த கோவை வடக்கு பிறகு தான் மற்ற தொகுதிகளை கன்சிடர் செய்யவே முடிவு செய்திருந்தாராம் அண்ணாமலை. இதற்கிடையே அதிமுக கூட்டணியில் எதிர்பாரதவிதமாக பாஜகவுக்கு கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது.இந்த தொகுதியை அண்ணாமலை தனக்கு ஒதுக்குமாறு தலைமையிடம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பாஜக தேசிய மகளிர் அணியின் தலைவியான வானதி சீனிவாசனும் அந்த தொகுதியை கைப்பற்ற காய்நகர்த்தி வந்துள்ளார். அதனால் அண்ணாமலை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட டெல்லி தலைமையை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?

ஆனால் அண்ணாமலை நின்றால் கோவை வடக்கு தொகுதி போட்டியிடுவேன் இல்லாவிட்டால் இந்த தேர்தலில் களமிறங்க போவதே இல்லை என்று அடம்பிடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து டெல்லி தலைமைக்கும் அண்ணாமலை ஏற்கனவே கடிதம் அளித்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி தலைமை அண்ணாமலை கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனை வெளியில் காட்டிக் கொள்ளும் நேரம் இது இல்லை என்று அமைதி காத்தது. இது ஒரு புறம் இருக்க கோவை வடக்கில் தான் தனது கிரீன் சிக்னல் காட்டவில்லை. தனது ஆதரவாளர்களுக்கு ஆவது நினைத்த தொகுதியை கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அண்ணாமலை வெளியேறுவாரா?

குறிப்பாக மயிலாப்பூர் தொகுதியை தனது ஆதரவாளர் எஸ்.ஜி. சூர்யா ஒதுக்க வேண்டும் என்று கூறிய நிலையில் அந்த தொகுதி தமிழிசைக்கு ஒதுக்கப்பட்டது.அதைப்போல தனதுஅண்ணாமலை ஆதரவாளரான ஏபி முருகானந்தத்திற்கு திருப்பூர் தெற்கு தொகுதியை ஒதுக்கவும் வலியுறுத்தி இருந்தார். ஆனால் திருப்பூர் தெற்கு தொகுதியில் நயினார் நாகேந்திரன் முக்கிய புள்ளிக்கு ஒதுக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது.இதனால் தான் எதிர்பார்த்த தொகுதியும் கிடைக்காமல், அவரது ஆதரவாளர்களுக்கு கேட்ட தொகுதியில் கிடைக்காததால் அண்ணாமலைக்கு வருத்ததில் இருப்பதாக கூறப்படுகிறது.

தொகுதி கிடைக்காததால் அதிருப்தி

ஒரு முன்னாள் மாநில தலைவராக தனக்கு என்னதான் முக்கியத்துவம் உள்ளது என்ற அதிருப்தியில் உள்ள அண்ணாமலை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 4ம் தேதி கட்சியில் இருந்து விலகுவே என தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்தாராம் அண்ணாமலை. அதே நேரம் தேர்தல் நேரத்தில் கட்சியில் இருந்து விலகுவது சரியாக இருக்காது தேர்தல் பணிகளை செய்து விட்டு விலகுவதே அரசியல் அறம் எனவும் கூறியிருக்கிறார்.இதனை உறுதிபடுத்தும், விதமாக அதிமுகவிற்கு கைநழுவி சென்ற கவுண்டம்பாளையம் தொகுதியில் வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ அருண்குமார் களம் இறங்குகிறார்
அவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரி வீடியோ வெளியானது. அதில் 23ஆம் தேதி காலையில் தனது வாக்கை செலுத்தி விட்டு பூத்த லெவல் ஏஜெண்டாக பணியாற்றுவேன் என்றும் அண்ணனுக்காக முழு வேலையை பார்த்துவிட்டு தான் வெளியே வருவேன் என்று கூறியுள்ள அண்ணாமலை தன்னிடம் ஆதரவு கேட்டு வரலாம் என்றும் கூறியுள்ளார். இதனால், கட்சியில் இருந் து அண்ணாமலை விலக போகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் உலா வருகிறது.