தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் – இந்திய அணி சாதனை

மும்பை,

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரை நடத்துகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக (ஏ,பி,சி,டி) பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் நேற்று நடைபெற்ற 3வது ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின.இதில் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் உலக கோப்பையில் இந்திய அணி தொடர்ச்சியாக 9 ஆட்டங்களில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தது. 2024-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்த டி20 உலக கோப்பையில் தொடர்ச்சியாக இந்தியா 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. தற்போது அமெரிக்காவை தோற்கடித்ததன் மூலம் தொடர்ச்சியாக 9-வது வெற்றியை பெற்றது.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகள் தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தன. இந்திய அணி அதனை முந்தி சாதனை புரிந்தது.

Source link