தொடர் சம்பவங்கள்: நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 2 மாதங்களில் 30 பேர் படுகொலை

நெல்லை,

நெல்லை சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சமீப காலமாக குற்றச் சம்பவங்கள், குறிப்பாக கொலை சம்பவங்கள் பெருமளவு அதிகரித்து வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை (சுமார் 2 மாதங்கள்) நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 30 படுகொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. தென்காசி மாவட்டத்தில் 5-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்து உள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜனவரி மாதம் மட்டும் 13 கொலைகளும், பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை 12 கொலை சம்பவங்களும் நடந்துள்ளன. இவற்றில் சமீபத்தில் நாங்குநேரி அருகே நடந்த இரட்டைக்கொலையும் அடங்கும். இந்த தொடர் கொலை சம்பவங்களில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது வேதனையின் உச்சம்.

கொலைகள் பெரும்பாலும், மதுபோதையிலும், குடும்ப பிரச்சினையிலும், கள்ளக்காதல் விவகாரத்திலும் நடந்து உள்ளது. சமீபத்தில் நடந்த இரட் டைக்கொலை சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள். அந்த கும்பல் மதுபோதையில் தான் கொலை வெறி தாக்குதலை அரங் கேற்றி இருப்பதால் போதைப்பழக்கமும் ஒரு காரணமாக உள்ளே நுழைகிறது.

அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை சம்பவங்களால், தென் மாவட்டங் களில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதோ? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகள், சமூக விரோதிகள் மற்றும் கூலிப்படையினரை அடையாளம் கண்டு இரும்புக்க ரம் கொண்டு அடக்க வேண்டும். தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Source link