சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட்திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத் தில் இன்றிரவு அரங்கேறும் தொடக்க ஆட்டத் தில் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2 வாரங்களுக்கு தோனி விளையாடமாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்துள்ளது. காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு கரணமாக தோனி சிகிச்சை பெற்று வருகிறார். எனவே ஐபிஎல் தொடரில் முதல் 2 வாரங்களுக்கு தோனி விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் முதல் இரண்டு வாரம் தோனி ஓய்வெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தோனியும், விராட் கோலியும் இனி களத்தில் சந்திக்க வாய்ப்பில்லா சூழல் ஏற்பட்டுள்ளது நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை – பெங்களூரு அணிகள் ஒருமுறை தான் மோதுகின்றன; அந்தப் போட்டியும் முதல் இரண்டு வாரத்திற்குள் வருகிறது.
தோனிக்கு இது கடைசி ஐபிஎல் சீசன் என்று சொல்லப்படும் நிலையில் இரு ஜாம்பவான்களும் ஒரே போட்டியில் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
இரு அணிகளும் பிளே ஆஃப் சென்றால் மட்டுமே வாய்ப்பு உண்டு.
