த.வெ.க. தலைவர் விஜய் வேலூரில் பிரசார பொதுக்கூட்டம்

வேலூர்,

தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க.வினர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதன் தலைவர் நடிகர் விஜய்யும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் வேலூருக்கு இந்த மாதத்தின் 2-வது வாரத்தில் நடிகர் விஜய் வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது.

அவர், வேலூரை அடுத்த பள்ளிகொண்டா அகரம்சேரி பகுதியில் மக்களை சந்திக்கும் வகையில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதற்கான பணியில் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் உள்ள செடி, கொடிகள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

7 பொக்லைன் எந்திரங்கள் மூலம் பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், வேலூருக்கு விஜய் வருகை தரும் தேதியை உள்ளிட்ட நிகழ்ச்சி நிரல் குறித்து தலைமைக்கழகம் அறிவிக்கும். நாங்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றனர்.

Source link