த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் நாளை ஆலோசனை

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் த.வெ.க. என இந்த தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் சூழல் உள்ளது.

த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தரப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். இருப்பினும் த.வெ.க.வுடன் இதுவரை எந்த கட்சியும் கூட்டணியில் இணைய முன்வரவில்லை. இந்த நிலையில், அடுத்தகட்ட தேர்தல் நகர்வுகள் குறித்து த.வெ.க. தீவிரமாக திட்டம் தீட்டி வருகிறது.

அந்த வகையில், த.வெ.க. தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகளுடன் நாளை மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக விஜய் கலந்து கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் 13-ந்தேதி நடைபெற உள்ள நிர்வாகிகள் உடனான சந்திப்பு குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link