“நகைப்பிரியர்கள் ஹாப்பி அண்ணாச்சி” தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைவு  – Kumudam

சர்வதேச சந்தையில் டாலர் குறியீட்டின் வலுவே தங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் பணவீக்க புள்ளிவிவரங்கள் இன்னும் கவலை அளிப்பதால், அமெரிக்க பெடரல் ரிசர்வ் (ஃபெடரல்) வட்டி விகிதங்களைக் குறைப்பதைத் தடுத்து வருகிறது. வட்டி விகிதங்கள் உயரும் போது, டாலருக்கான தேவை அதிகரிக்கிறது. இதன் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. 

தங்கம் விலை கடந்த சனிக்கிழமை 3-வது நாளாக சரிவை சந்தித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,18,080-க்கும், கிராமுக்கு ரூ.140 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது.

வெள்ளி விலையும் கடந்த சனிக்கிழமை  குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,680-க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,710 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.4 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.276-க்கு விற்பனை ஆகிறது. கிலோவிற்கு ரூ.4 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,76,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Source link