நடிகரின் வாகனத்தை பின் தொடரும்இளைஞர்கள்.. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதிலடி! – chief minister m.k. stalin offers advice to youths who follow actors’ vehicles

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களில் உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட எழுப்பூரில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில், இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் காலையில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தபோது மக்களை நேராக சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கொதித்த விஜய்…திமுக மீது கடும் விமர்சனம்!

அப்போது திமுக வேட்பாளர் கே கே செல்ல பாண்டியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து இலுப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து பெரிய கடைவீதி வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பொது மக்களை சந்தித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

இதற்கிடையே வழியில் இருந்த சாலை ஓர டீக்கடையில் தேநீர் அருந்தி பொதுமக்களுடன் உரையாடினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவு கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாகவும், சிறப்பாகவும் இருக்கிறது. மேலும் எடப்பாடி பழனிசாமி தோல்வியின் உச்சத்திற்கு செல்வதால் விரக்தியில் திமுக அரசு மீது கடுமையாக குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று எற்கெனவே கூறியிருந்த நிலையில், தற்போதுமக்கள் ஆதரவு மற்றும் வரவேற்பை பார்த்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து நடிகர்களின் பிரச்சார வாகனத்தை பின் தொடர்ந்து செல்வதால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடிகர்களின் பிரச்சார வாகனத்தை பின்தொடர்ந்து செல்லும்போது பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை பொதுமக்கள் கவனித்து வருகிறார்கள். விரைவில் இளைஞர்கள் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள் திருந்துவார்கள் என்று தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலையொட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் வாகனத்தை பின் தொடர்ந்து செல்கின்றனர். இதனால், வாகனங்களில் சிக்கி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

குறிப்பாக கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் பிரச்சார விபத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தவெக கட்சித் தரப்பில் விஜய் வாகனத்தை பின் தொடர வேண்டாம், பொதுக்கூட்டங்களுக்கு குழந்தைகள், பள்ளி மாணவர்கள் , முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் வர வேண்டாம் என்று அறிவுத்தியும் தொடர்ந்து அதனை மீறி செயல்பட்டு வருகின்றனர்.

இதனால், விஜய் பேச்சை சிறிதும் கேட்காத தொண்டர்கள் ஒரு வேலை தவெக ஆட்சி அமைந்தால் விஜய் எப்படி தொண்டர்களை கட்டுப்படுத்துவார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் முன்வைக்கப்படுகிறது.

Source link