நடிகர் சல்மான் கானின் தந்தை ஆஸ்பத்திரியில் அனுமதி

மும்பை,

நடிகர் சல்மான்கானின் தந்தையும், பழம்பெரும் கதையாசிரியருமான சலீம் கான் (வயது 90) உடல் நலம் பாதிக்கப்பட்டு பாந்திராவில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஆஸ்பத்திரி டாக்டர் ஜலீல் பார்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சலீம் கான் நேற்று காலை 8.30 மணிக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்ப டாக்டர் சந்தீப் சோப்ரா அவசர சிகிச்சைக்கு சலீம் கானை அழைத்து வந்தார். எனவே சலீம் கானுக்கு அவசரகால சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். குடும்பத்தினர் ஒப்புதலுக்கு பிறகு அவர் உடல்நிலை குறித்து கூடுதல் தகவல்கள் இன்று (புதன்கிழமை) வழங்கப்படும்” என்றார்.

சலீம் கான் ஷோலே, தீவார், டான், திரிசூல், சீதா ஆர் கீதா உள்ளிட்ட பல்வேறு மெகாஹிட் படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சலீம் கானை பார்க்க மகன் சல்மான்கான், மகள் அல்விரா, மருமகன் அதுல் அக்னிகோத்ரி, ஆயுஷ் கோத்ரி உள்ளிட்டவர்கள் நேற்று ஆஸ்பத்திரிக்கு வருகை தந்தனர்.

Source link