நடிகைகள் கவர்ச்சி காட்டுவதில் தவறில்லை- காஜல் அகர்வால்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகு அவ்வப்போது மட்டுமே சினிமாவில் தலைகாட்டி வருகிறார். ‘இந்தியன்-3’ படத்தில் நடித்து முடித்துள்ள அவர், தற்போது ‘ராமாயணா’ படத்தில் நடித்து வருகிறார்.

ஒருகாலத் தில் சினிமாவின் முன்னணி நடிகையாக கோலோச்சிய காஜல் அகர்வால், தற்போது மீண்டும் பிசியான நடிகையாக மாற துடிக்கிறார். பெரிய நடிகர்களின் படங்களில் இணையவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக பட விழாக்களில் படு கவர்ச்சியாக உடை அணிந்து கவனம் ஈர்த்து வருகிறார்.

தன்னை பார்த்து யாருமே ‘சீனியர்’ நடிகை என்று சொல்லிவிடக்கூடாது என்ற எண்ணத்தில், ‘ஜூனியர்’ நடிகைகளுக்கு போட்டியாக ஆடை குறைப்பில் இறங்கி உள்ளாராம். “கவர்ச்சி நடிப்பின் ஒரு பரிமாணம்தான். அதை தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நடிகைகள் கவர்ச்சி காட்டுவதில் தவறில்லை. நடிகையின் பயணத்தில் திருமணம் என்பது எல்லைக்கோடு அல்ல” என்கிறார். காஜல் அகர்வாலின் இந்த போக்கு ஓரங்கட்டப்பட்ட முன்னணி நடிகைகளை கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளதாம்.

Source link