சென்னை,
சென்னையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் தனது வீட்டில் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருகம்பாக்கத்தில் வசிக்கும் அந்த பிரபல சின்னத்திரை நடிகை, படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர் உடை மாற்றிக் கொண்டிருக்கையில், ஜன்னல் வழியாக ஒருவர் எட்டிப் பார்த்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதைத்தொடர்ந்து நடிகை போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், அவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் பஞ்சாபைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே அந்த நபர் நடிகையை தவறான நோக்கில் பார்த்ததாக புகார் எழுந்திருந்த நிலையில், அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
