காரைக்குடி,
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23-ந்தேதி நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படிப்படியாக முன்னேறி அரசியலுக்கு வந்திருக்கிறார். கடந்த பத்து வருடங்களில் யாரையாவது மு.க.ஸ்டாலின் கொச்சையாக பேசியதற்கு ஏதாவது உதாரணம் காட்டமுடியுமா? ஒரு கொடுஞ்சொல்லாவது பேசியிருப்பாரா, உண்மையிலேயே முதல்-அமைச்சர் பெரியமனுஷன் தான் என்றார்.
ஒரு அனுபவசாலி, பெரியமனுஷன் முதல்-அமைச்சராக வேண்டுமா, இல்லை பாஜகவின் முகமூடியாக இருப்பவர் வேண்டுமா, இல்லை எந்த அனுபவமும் இல்லாமல் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி இருக்கும் ஒரு நடிகர் முதல் அமைச்சராக வேண்டுமா? தமிழ் இன கோட்பாடு என எதுவும் இல்லாமல் உணர்வுகளை மட்டும் தூண்டுபவர் வேண்டுமா என்பதை யோசித்து பார்த்தீர்கள் என்றால் அது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
