நயினார் நாகேந்திரனுக்கு தமிழக பெண் எம்.பி.க்கள் கண்டனம்

சென்னை,

திரைப்பட நடிகையுடன் த.வெ.க. தலைவர் விஜய்யை ஒப்பிட்டு தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனங்கள் எழுந் துள்ளன. தமிழக பெண் எம்.பி.க்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.:- ஒரு ஆணை விமர்சிப்பதற்கு கூட, ஒரு பெண்ணை இழிவுபடுத்தி அநாகரிகமாக பேசு வதே ஆர்.எஸ்.எஸ் பா.ஜனதாவின் அருவருக்கத்தக்க அரசியல். தமிழ்நாடு பா.ஜனதா தலைவரின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்:- இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி, அவதூறாகப் பேசுவது அழகல்ல. பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல்.

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி:-பொதுவாழ்வில் ஒரு கட்சித் தலைவர் மீது உங்களுக்குவிமர்சனங்கள் இருந்தால் கருத்து ரீதியாக அவரை எதிர்கொள்ளுங்கள். விமர்சனம் செய்யுங்கள். அதைசெய்ய முடியாமல் ஒரு பெண்ணை ஆபாசமாகப் பொதுவெளியில் பேசுவது பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம், பார்க்கலாம், விமர்சிக்கலாம் என்கிற ஆபத் தான, அருவருக்கத்தக்க மனநிலையின் உச்சம். கடுமையான கண்டனத்துக்குரியது. பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கிற ஆர்.எஸ்.எஸ். பா.ஜனதா சித்தாந்தத்தின் வெளிப்பாடே இது. பா.ஜனதா மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கருத்துக்கு பொதுவெளி யில் மன்னிப்புக் கேட்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Source link