“நாகபந்தம்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்தாண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ‘நாகபந்தம்’. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த மர்மத் திரில்லர் படத்தில் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை நபா நடேஷ் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அபிஷேக் நாமா இயக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘நாகபந்தம்’ படத்தின் டீசரை மகா சிவராத்திரி நாளில் மகேஷ்பாபு வெளியிட்டிருந்தார்.இப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

இந்நிலையில், ‘நாகபந்தம்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் 15ம் தேதி காலை 11:11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Source link