சென்னை,
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நமீபியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன் குவித்தது. இஷான் கிஷன் 24 பந்தில் 61 ரன்னும் (6 பவுண்டரி, 5 சிக்சர் ), ஹர்திக் பாண்ட்யா 28 பந்தில் 52 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். பின்னர் ஆடிய நமீபியா 18.2 ஓவரில் 116 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 93 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்ய குமார் யாதவ் கூறியதாவது,
இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதல்ல. ஆனால் சாம்சன், இஷான் கிஷன் தொடங்கிய விதம் இது ஒரு சுலபமான ஆடுகளம் என்பதை போல் உங்களுக்கு காட்டி இருக்கலாம்.ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே ஆகியோர் அமைத்த பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமானது.
நமீபியா பந்துவீச்சாளர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்கள் உண்மையிலேயே நன்றாக பந்து வீசினார்கள்.வருண் சக்கரவர்த்தி, அக் ஷர் பட்டேல் இணைந்து நன்றாக பந்து வீசினார்கள். இந்த இணையை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வது நெருக்கடியாகதான் இருக்கும்.
இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியுமே முக்கியமானது. சிறு தடுமாற்றத்துடன் தான் இந்த தொடரை தொடங்கினோம். அதன் பிறகு நாங்கள் எங்களுடைய பாதையில் சரியாக செல்கிறோம் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
