நாங்கள் யாரையும் மிரட்டவில்லை..அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

சென்னை,

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் , ரஜினியை திமுக மிரட்டியது என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்து தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி,

நாங்கள் யாரையும் மிரட்டவில்லை திமுக இயக்கத்தை பொருத்தவரையில் ஜனநாயகம் என்பது திமுகவில் தான் பார்க்க முடியும். யாரையும் மிரட்டுகின்ற தன்மையில் நாங்கள் அரசியல் செய்ததே இல்லை, மக்களை அன்பால் வளைத்து அரசியல் செய்கிறோம் தவிர யாரையும் மிரட்டினாங்கள் பேசுவதும் இல்லை அப்படி அரசியல் செய்ததும் இல்லை. என தெரிவித்தார்.

மேலும் காங்கிரஸிடம் கெஞ்சி தான் கூட்டணியில் திமுக இருப்பதாக கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு,

நாங்கள் யாரையும் கெஞ்சவில்லை. ஏற்கனவே ஒன்பது ஆண்டு காலமாக எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு கூட்டணி நீடித்து வருகிறது. 9 ஆண்டுகளாக கூட்டணி நீடிப்பது என்பது வரலாறு.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலுக்கும் வரலாறு மாறும். ஆனால் தற்போது இந்த தேர்தலிலேயே கூட்டணி வந்துவிட்டது. அடுத்த தேர்தலிலும் இந்தியா கூட்டணியுடன் தான் இருப்போம். 15 ஆண்டுகள் இந்தியா கூட்டணியில் எந்த பிரச்சனையும் இருக்கப் போவதில்லை. மேலும் இது சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல என்று தெரிவித்தார்.

Source link