நாடாளுமன்றத்திற்கு டி-சர்ட் அணிந்து வருவதா? ராகுல் காந்திக்கு மத்திய மந்திரி கண்டனம்

புதுடெல்லி,

மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு நேற்று டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தியுடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அவர் அவையின் தளத்தில் (சபையில்) முறையாகப் பேசும்போது, மரபுகள், விதிகள் மற்றும் நன்னடத்தை நெறிகளைப் பின்பற்ற வேண்டும். இவை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிக முக்கியமான அங்கங்களாகும். ஆனால் ராகுல் காந்தியின் மனம் அவரது ஆலோசகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எதைச் சொல்லச் சொல்கிறார்களோ, அதையே ராகுல் பேசுகிறார்,” என்று கூறினார்.

ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு டி-ஷர்ட் அணிந்து வருவது குறித்து நிருபர்கள் கேட்டபோது, “விதிகள் மற்றும் நன்னடத்தை நெறிகளைப் புரிந்து கொள்வதில் அவருக்குச் சிக்கல்கள் உள்ளன. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது ஒருவர் தன்னை முறையாக நடத்திக்கொள்ள வேண்டும். கண்ணியமான உடை அணிவதும் அதன் ஒரு பகுதியே,” என்றார்.

Source link