புதுடெல்லி,
அமெரிக்கா – இந்தியா இடையே மேற்கொள்ளப்பட்டிருக்கும் வர்த்தக ஒப்பந்தத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த ஒப்பந்தமானது இந்தியாவிற்கு வைக்கப்பட்ட பொறி என விமர்சித்து பதாகைகளுடன் எம்.பி.க்களை முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினர்.
தொழிலாளர்கள் சட்டத்திருத்தம், வர்த்தக ஒப்பந்தங்கள், தனியார்மயமாக்கல், தொழிலாளர் மற்றும் விவசாய விரோத கொள்கைகள் உள்ளிட்டவைக்கு எதிராக நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், இந்தியா – அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்டிருக்கும் வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் ஆளும்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளன. இன்று காலை மக்களவை கூடியதும், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர்.
