நானியின் ’தி பாரடைஸ்’ – கவனம் ஈர்க்கும் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ

சென்னை,

நானி நடிப்பில் உருவாகி வரும் ‘தி பாரடைஸ்’ படத்தின் முதல் பாடல் புரோமோ வெளியாகி உள்ளது.

நானி – ஸ்ரீகாந்த் ஒடெலா இணைப்பில் வெளியான படம் ‘தசரா’. இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு ‘தி பாரடைஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் கவனம் பெற்றது.

Also Read
’அன்று 5 மில்லியன் பெரிய விஷயம்…இன்று 50 மில்லியன் சாதாரணம்’ – நடிகை நாக துர்கா ஓபன் டாக்
நானியின் ’தி பாரடைஸ்’ - கவனம் ஈர்க்கும் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ’ஆயா ஷேர்’ புரோமோ வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இதன் காட்சியமைப்புகள், நானியின் கெட்டப் என இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. முழு பாடல் நாளை வெளியாக உள்ளது.

எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார்.

Source link