நாமக்கல்லில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு அனுப்பிய 3 கோடி முட்டைகள் கன்டெய்னர்களில் தேக்கம்

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 1200-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு தினசரி 6 கோடிக்கும் மேல் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் சுமார் 1 கோடி முட்டைகள் வெளிநாடுக ளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இது கடந்த மாதத்தில் சற்று குறைந்தாலும், சீராக ஏற்றுமதி நடைபெற்று வந்தது.

குறிப்பாக துபாய், கத்தார், ஓமன் போன்ற வளைகுடா நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுக்கு சுமார் 80 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப் பட்டன. இவை கன்டெய்னர்களில் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும். ஆனால் அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேல் முட்டை ஏற்றுமதி அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நாமக்கல்லை சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறியதாவது:-

நாமக்கல் மண்டலத்தில் இருந்து கடந்த மாதம் 28-ந் தேதி வளைகுடா நாடுகளுக்கு 77 கன்டெய்னர்களில் சுமார் 3 கோடியே 50 லட்சம் முட் டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் 50 லட்சம் முட்டைகள் மட் டும் துபாய்க்கு சென்றுவிட்டது. மீதமுள்ள 3 கோடி முட்டைகள் போர் காரணமாக இன்னும் வளைகுடா நாடுகளுக்கு சென்று சேரவில்லை. குறிப்பாக முட்டைகள் அனைத்தும் கடந்த 12 நாட்களாக துறைமுகம் மற்றும் கப்பலில் நடுக்கடலில் உள்ளன.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்து வருகிறோம். ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ள முட்டைகளில் உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி அச்சிடப்பட்டு உள்ளது. எனவே குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் அந்த முட்டைகளை விற்பனை செய்ய முடியாது. எனவே மத்திய வேளாண்மை ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சம்பந்தப்பட்ட நாட்டின் அதிகாரிகளுடன் பேசி, நடுக்கடலில் கன்டெய்னர்களில் தேங்கி இருக்கும் முட்டைகளை உரிய வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link