நாமக்கல்லில் கூடிய கூட்டம்: தேர்தல் விழிப்புணர்வில் உலக சாதனை!

நாமக்கல்,

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (மார்ச் 30) தொடங்க இருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து கொண்டு இருக்கின்றன.

இது ஒரு பக்கம் நடைபெற்றாலும், மற்றொரு பக்கம் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய, தேர்தல் ஆணையமும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை பொதுமக்கள் மத்தியில் மேற்கொண்டு வருகிறது.

Also Read
பற்ற வைத்த ஈரான்… ‘நன்றி இந்தியா’ என்ற வாசகத்துடன் இஸ்ரேலை தாக்க புறப்பட்ட ஏவுகணை

நாமக்கல்லில் கூடிய கூட்டம்: தேர்தல் விழிப்புணர்வில் உலக சாதனை!

அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் நிர்வாகமும், பாவை என்ஜினீயரிங் கல்லூரியும் இணைந்து, தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் மொபைல் செயலியை மனித வடிவில் பிரமாண்டமாக அமைத்து உலக சாதனை படைத்துள்ளது.

கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான துர்கா மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 8,662 பேர் கலந்து கொண்டனர். உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது.

Source link