நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்வு

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 415 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். இதன் மூலம் முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக குறைந்து உள்ளது. சென்னையில் முட்டை கொள்முதல் விலை 480 காசுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link