நாம் தமிழர் மாநாடு: 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் – காரைக்குடியில் சீமான் போட்டி

திருச்சி,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி புதூரில் இன்று நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மகளின் மாநாடு என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்று வருகிறது.

மாநாட்டின் தொடக்கத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் நாம் தமிழர் கட்சிக்கொடி ஏற்றினார். பின்னர், சீமான் தாயார் அன்னம்மாள், மனைவி கயல்விழி மற்றும் நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகிகள் குத்து விளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தனர்.

இந்த மாநாட்டில் தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 தொகுதிகளுக்கு பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 117 தொகுதிகளுக்கு ஆண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் போட்டியிட உள்ளார்.

நாம் தமிழர் வேட்பாளர்கள்:-

Attachment
PDF
2026_NTK_Candidates_All_Pages_3_30__1_

Preview

Source link