நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டி தொடரில் இருந்து ஈத்தன் போஸ்க் விலகல்

கேப் டவுன்

நியூசிலாந்து நாட்டில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி பங்கேற்கிறது. வருகிற 15-ந்தேதி தொடங்கும் போட்டியை முன்னிட்டு 15 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில், ஆல்-ரவுண்டர் ஈத்தன் போஸ்க் காயத்தினால் டி20 போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு ஆல்-ரவுண்டரான வியான் முல்டர் சேர்க்கப்பட்டு உள்ளார்.

Also Read
டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் அதிக ரன் குவித்த வீராங்கனையாக பெர்ரி சாதனை
வியான் முல்டர்

ஓராண்டுக்கு முன்பு தென்ஆப்பிரிக்க அணிக்காக ஒரு நாள் போட்டி தொடரின் ஒரே ஒரு போட்டியில் போஸ்க் விளையாடி இருக்கிறார். சர்வதேச டி20 போட்டியில் முதன்முறையாக விளையாட இருந்த நிலையில், அவர் விலகியுள்ளார்.

முல்டர் இதுவரை 11 சர்வதேச டி20 போட்டிகளில் அணிக்காக விளையாடி இருக்கிறார். கடைசியாக 2024-ம் ஆண்டு செப்டம்பரில் அயர்லாந்து அணிக்கு எதிராக அவர் விளையாடினார். இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் விளையாட உள்ளார்.

Source link