நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி – தென் ஆப்பிரிக்காவுக்கு 92 ரன்கள் இலக்கு

மவுண்ட் மவுன்கானுய்,

நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இரு அணிகளும் டி20 உலகக் கோப்பைக்கு பின் மீண்டும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

இதற்கிடையில், இந்த போட்டிக்கான டாஸை வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீசியது.

நியூசிலாந்து தரப்பில் டெவான் கான்வே மற்றும் டாம் லாதம் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் கான்வே 1 ரன்னில் கோட்சே பந்தில் அவுட்டானார். தொடர்ந்து லாதமும் கோட்சே பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

பின்னர் களமிறங்கிய டிம் ராபின்சன் 6(5), நிக் கெல்லி 2(5), பெவான் ஜேக்கப்ஸ் 10(7) சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மிட்செல் சான்ட்னர் – ஜேம்ஸ் நீசம் ஜோடி நிதானமாக ஆடி ரன் சேர்த்தது.

இதற்கிடையில், மிட்செல் சான்ட்னர் 15 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து ஜேம்ஸ் நீசமும் 26(21) ரன்களில் அவுட்டாக நியூசிலாந்து அணி 100 ரன்களை தாண்டுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் வந்த வீரர்களும் தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.

இறுதியில் 14.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 91 ரன்கள் எடுத்தது. நியுசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் நீசம் 26 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் என்கோபானி மோகோய்னா 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி 92 என்ற இலக்கை நோக்கி ஆட உள்ளது.

Source link