நீண்டகால போர், பதற்றம் அதிகரிப்பு… யாருக்கும் பலன் இல்லை: சீனா

பீஜிங்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்து வரும் தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

மேற்காசிய போரால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ளன. வளைகுடா நாடுகளும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் இன்று பேசும்போது, இந்த விவகாரத்தில், பதற்றங்களை குறைப்பதற்கு அனைவரும் ஆக்கப்பூர்வ முறையில் பங்காற்ற வேண்டும். அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஹார்மூஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரானுக்கு இன்றிரவு 8 மணிவரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் காலக்கெடு விதித்துள்ள சூழலில், சீன அமைச்சகம் இதனை தெரிவித்து உள்ளது. அப்படி ஈரான் அதனை ஏற்கவில்லை என்றால், மின்சார உற்பத்தி ஆலைகள் மற்றும் பாலங்கள் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அச்சுறுத்தல் விடுத்து உள்ளார்.

இந்த ஆலைகளை தொடர்ந்து, எரிய செய்து, வெடிக்க செய்வதற்கான நோக்கம் என்னவென்றால், அவற்றை மீண்டும் ஒருபோதும் பயன்படுத்த கூடாது என்பதே ஆகும் என்றும் டிரம்ப் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். ஈரானில் எந்த பாலங்களும், மின்சார உலைகளும் இருக்காது. கற்காலத்திற்கு சென்று விடுவார்கள் என்றும் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.

Source link