திருநெல்வேலி மாவட்டம் பாலாமடையை சேர்ந்த சுதாகர் (வயது 29) என்பரின் மனைவி பேச்சியம்மாள்(24). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மேலும் இந்த தம்பதியினர் இடையே கடந்த 2 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் திருநெல்வேலி மாநகரம், சந்திப்பு பேருந்து நிலையத்தில் வைத்து இன்று காலையில் சுமார் 10.15 மணியளவில் குடும்பத் தகராறு காரணமாக சுதாகர் அவரது மனைவியை அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பேச்சியம்மாள் இறந்தார்.
இதனையடுத்து சுதாகர் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் இந்த கொலை தொடர்பாக சந்திப்பு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்து வருகிறார். தினசரி பல நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்திற்குள் பட்டப்பகலில் இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
