திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம், கார்த்திகேயன்நகர் ஆட்டோ நிறுத்தம் அருகே நேற்று ரெட்டியார்பட்டியை சேர்ந்த முருகன் (வயது 41) என்பவரை இரு சக்கர வாகனத்தில் வந்த பாளையங்கோட்டையை சேர்ந்த ரமேஷ்(30), தியாகராஜநகரைச் சேர்ந்த தினேஷ்பாஸ்கர்(29) மற்றும் கணேஷ்குமார்(31) ஆகிய 3 பேர் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவதூறாக பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின்பேரில் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
