நெல்லையில் கஞ்சா, போதை மருந்து பறிமுதல்: 4 பேர் கைது

நெல்லை,

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை பொருள் தடுப்பு தொடர்பாக காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த அப்துல்வாஹித் (வயது 25), ஹைபீஸ் அகமது(20), வெள்ளத்துரை(32), பிலால்(26) ஆகியோரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 5 கிராம் கஞ்சா, கஞ்சா எண்ணெய் மற்றும் போதை மருந்து ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மேற்சொன்ன 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Source link