பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு – அரசாணை வெளியீடு

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:-

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு அளித்திட அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அரசால் தொடர் பரிசீலனை நடத்தப்பட்டது.

Also Read
தனியார் பள்ளி வளாகங்களில் அரசியல், வகுப்புவாதம் ரீதியிலான கூட்டங்கள் நடத்தக்கூடாது – அரசிதழ் வெளியீடு
கோப்புப்படம்

இந்த நிலையில், மாநில திட்ட இயக்குனரின் கருத்துருவை ஏற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் பணிபுரியும் 11,773 பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2026 ஜனவரி 1-ந்தேதி முதல் தொகுப்பூதியத்தை ரூ.12,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தியும், மே மாதத்திற்கு மட்டும் ரூ.10,000 சிறப்பு உதவித் தொகையாக வழங்கப்படும்.

Also Read
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கோப்புப்படம்

இதற்காக நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில் 3 மாதங்களுக்கு ரூ.8 கோடியே 82 லட்சத்து 97 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றம்
கோப்புப்படம்

Source link