2025-ஆம் ஆண்டில் 1,139 பேர் உயிரிழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 2026-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1,139 பேர் உயிரிழப்பு, 1,045 சம்பவங்கள்
2025-ஆம் ஆண்டில், பாகிஸ்தான் 1,045 தனித்தனி சம்பவங்களில் 1,139 பயங்கரவாதம் தொடர்பான மரணங்களைப் பதிவு செய்ததுள்ளது.கடந்த ஆண்டை விட 6 சதவிகித உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 2013-க்குப் பிறகு பாகிஸ்தான் பாதுகாப்புச் கடுமையான சீரழிவை சந்தித்துள்ளது. இது ஓராண்டில் அந்நாடு கண்டிராத பயங்கரவாதத்தால் ஏற்பட்ட மிக உயர்ந்த உயிரிழப்பு அதிகமான எண்ணிக்கை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2025-ல் பதிவுசெய்யப்பட்ட உலகளாவிய பயங்கரவாத மரணங்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தைக் கொண்டுள்ள புர்கினா பாசோ, நைஜீரியா, நைஜர் மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய ஐந்து நாடுகளுடன்ஒப்பிடும் போது பாகிஸ்தானில் நடக்கும் தாக்குதல்கள் அதற்கு நிகராக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பிடப்பட்டு உள்ளது.
Russia-Ukraine போர்:காரணங்கள் மற்றும் முக்கிய விவரங்கள்
24 கோடி மக்கள் தொகையைக் கொண்ட, செயல்படும் குடிமை அரசு மற்றும் வலுவான ஒரு சக்திவாய்ந்த இராணுவ அமைப்பையும் கொண்ட, அணு ஆயுதம் ஏந்திய ஒரு நாடான பாகிஸ்தானுக்கு, இந்தப் பட்டியலில் அது இடம்பெற்றிருப்பது, அதன் உள்நாட்டுப் பாதுகாப்பு கட்டமைப்பு எந்த அளவிற்கு மோசமாகச் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது.
பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பு தான் தீவிரவாத பிரச்சனைகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.2025ஆம் ஆண்டில் மட்டும், இந்த அமைப்பநடந்த அனைத்து பயங்கரவாதத் தாக்குதல்களில் 74 சதவீதத்திற்கும் அதிகமானவையும், அனைத்து பயங்கரவாத மரணங்களில் 67 சதவீதமும் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியுள்ளது.இதனால், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த தாக்குதல்கள், பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலையை கடுமையாக பாதித்து வருகிறது.
பலுசிஸ்தான் விடுதலைப் படையை விட பல மடங்கு அதிக தாக்குதல்
2009ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் நடைபெற்ற பல தீவிரவாத தாக்குதல்களில் பெரும்பாலானவற்றிற்கும் இந்த TTP அமைப்பே காரணமாக உள்ளது. நாட்டில் செயல்படும் மற்ற தீவிரவாத அமைப்புகளுடன் ஒப்பிடும்போது, TTP மிக அதிகமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, பலுசிஸ்தான் விடுதலைப் படையை விட பல மடங்கு அதிக தாக்குதல்களை இது நடத்தியுள்ளது.
உலகளவில் பார்க்கும்போது, TTP தற்போது மிக ஆபத்தான தீவிரவாத அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. 2025ஆம் ஆண்டில், உலகின் முக்கிய தீவிரவாத அமைப்புகளில் பல அமைப்புகள் செயல்பாடுகளை குறைத்த நிலையில் இருந்தாலும், TTP மட்டும் தனது தாக்குதல்களை மேலும் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2025ஆம் ஆண்டில் TTP மேற்கொண்ட மிக அதிக தாக்குதல்கள், ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கெய்பர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) பகுதியில் நடைபெற்றன. இந்த பகுதி தற்போது நிரந்தர மோதல் மண்டலமாக மாறியுள்ளது. அந்த பகுதியில் பாதுகாப்பு படைகள் மற்றும் பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு, பலர் உயிரிழந்துள்ளனர்.
அந்த ஆண்டில் நடந்த முக்கிய தாக்குதல்களில் ஒன்றாக, பாதுகாப்பு படைகள் மீது ஒருங்கிணைந்த ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒரே சம்பவத்தில் பல ராணுவத்தினர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய தாக்குதல்கள், பாகிஸ்தானில் தீவிரவாதம் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்பதையும், பாதுகாப்பு சவால்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதைவும் வெளிப்படுத்துகிறது.
தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளாக அதிகரித்து வரும் மரணங்கள்
2025-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டில் பாகிஸ்தான் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது. தற்போது அது முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பயங்கரவாத தாக்குதலின் கூடாரம் என்று கூறப்பட்டு வரும் தருணத்தில்,2026-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு வெளியாகியுள்ளது. அமெரிக்காவிற்கு மிக முக்கியமான அணுசக்தி அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் நான்கு நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தானை அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் குறிப்பிட்டு இருந்தார்.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு நாடாக அல்லாமல், அதன் பாதிக்கப்பட்ட நாடாகவே தன்னை நீண்ட காலமாக விவரித்து வரும் ஒரு நாட்டிற்கு, 2026 ஆம் ஆண்டுக்கான இந்தக் குறியீட்டை மறுப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.மேலும் இந்த பட்டியலில் 2 வது இடத்தில் மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினா ஃபாசோ,3 வது இடத்தில் நைஜீரியா உள்ளது.
