பரத்தின் ‘காளிதாஸ் 2’… பவானி ஸ்ரீயின் கதாபாத்திரம் வெளியீடு

சென்னை,

இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகி உள்ள திரில்லர் படம் காளிதாஸ் 2. இப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சூப்பர் ஹிட் ஆன காளிதாஸ் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி உள்ள இந்தப் படம், வரும் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில், பரத் உடன் அஜய் கார்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Also Read
“கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை ராமர்” – ரன்பீர் கபூர்
பரத்தின் ‘காளிதாஸ் 2’... பவானி ஸ்ரீயின் கதாபாத்திரம் வெளியீடு

மேலும், பவானி ஸ்ரீ, அபர்ணதி, கிஷோர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், பவானி ஸ்ரீ ‘வைஷ்ணவி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் அவர் போலீஸ் அதிகாரியாக தோன்றி இருக்கிறார்.

Source link