திரையரங்குகளில் மட்டுமல்ல, ஓ.டி.டி. தளங்களிலும் தற்போது திரைப்படங்கள் அணிவகுத்து வருகின்றன. வாரம் தோறும் புதிய படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் எந்தெந்த படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகி உள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில், பொங்கலை முன்னிட்டு வெளியான படம் பராசக்தி. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்த இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருந்தார். மொழி திணிப்பை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.
நாரி நாரி நடுமா முராரி என்பது ராம் அப்பராஜு இயக்க எமோஷனல் கலந்த ரொமாண்டிக் திரைப்படம். இப்படத்தில் ஷர்வானந்த், சம்யுக்தா மற்றும் சாக்ஷி வைத்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், நரேஷ், சுனில், சம்பத் ராஜ் மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.
‘அன்பாமிலியர்’ என்ற வெப் தொடர் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இத்தொடரில், சுசான் வுல்ப், பெலிக்ஸ் க்ராமர், சாமுவேல் பின்சி, ஆண்ட்ரியாஸ் பீட்ச்மேன், ஹென்றி ஹிப்சன், மஜாபோன்ஸ், செய்னெப்சலே, ஜெனிஜா ரிகோவா, நடாலியாபெலிட்ஸ்கி, ஆரோன் அல்டராஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் வெளியான படம் ‘கொம்புசீவி’. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் டென்ட்கொட்டா ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான படம் ‘தி ராஜா சாப்’. பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மிகவும் பிரம்மாண்டமாக ஹாரர் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளன. இப்படம் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.
கிராமப்புறத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘நீலகண்டா’. இப்படத்தில் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.
வ.கௌதமன் இயக்கி நடித்த திரைப்படம் ‘படையாண்ட மாவீரா’. ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.
தெலுங்கில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் ‘சைக் சித்தார்த்தா’. ஷ்யாம் சுந்தர் ரெட்டி துடி மற்றும் ஸ்ரீ நந்து ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை வருண் ரெட்டி இயக்கியுள்ளார். இதில் நந்து மற்றும் யாமினி பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
டிடிஎப் வாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐபிஎல்’.இப்படத்தை கருணாநிதி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில், நடிகர்கள் கிஷோர், அபிராமி, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். அரசியல் பின்னணியில் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக உருவான இந்த படம் டென்ட்கொட்ட ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
