’பவர் பிளேயில்… வெற்றிக்கு அதுதான் காரணம்’ – ஐதராபாத் கேப்டன் இஷான் கிஷன்

ஐதராபாத்,

ஐதராபாத் அணியின் கேப்டன் இஷான் கிஷன், கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, தொடக்க வீரர்களின் அதிரடியே அணிக்கு வெற்றியைத் தேடி தந்தது என தெரிவித்தார்.

தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடியதையும், கிளாசன் இறுதி வரை இருந்து இன்னிங்ஸை கொண்டு சென்றதையும் நிதிஷ்குமார் ரெட்டி முக்கிய பங்களிப்பு செய்ததையும் அவர் பாராட்டினார்.

Also Read
ஐதராபாத் அணிக்காக 100 சிக்ஸர்கள்… வார்னருடன் சாதனை பட்டியலில் இணைந்த அபிஷேக் சர்மா
’பவர் பிளேயில்... வெற்றிக்கு அதுதான் காரணம்’ - ஐதராபாத் கேப்டன் இஷான் கிஷன்

இருப்பினும் பீல்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் இஷான் கிஷன் கூறினார். அவர் பேசுகையில், “பவர் பிளேயில் 80க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தது போட்டியை எங்களுக்கு எளிதாக்கியது. அதனால் மற்ற பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாட நேரம் கிடைத்தது” என்றார்.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 226/8 ரன்கள் எடுத்தது. பின்னர் 227 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணி, 16 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Source link