"பவழ மல்லி": சாய் அபயங்கர் குரலில் புதிய இன்டீ பாடல் வெளியீடு

சாய் அபயங்கர், “கட்சி சேரா”, “ஆச கூட” போன்ற ஆல்பம் பாடல்கள் மூலம் புகழ் பெற்றார். இந்த பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அவருடைய இசையமைப்பில் முதல் படமாக ‘டியூட்’ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து ‘கருப்பு’, ‘மார்ஷல்’, ‘அட்லி இயக்கி வரும் படம்’, ‘பாலாஜி தரணீதரன் விஜய் சேதுபதி படம்’, ‘தனுஷ் படம்’, உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார் சாய் அபயங்கர்.

தமிழ் திரையுலகில் புதுமையான இசை மொழியால் வேகமாக உயர்ந்து வரும் இசையமைப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் சாய் அபயங்கர். இன்டீ (indie)பாடல்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், அண்மைக்காலத்தில் பல பெரிய படங்களுக்கும் இசையமைத்து தனது தடத்தை பதித்துள்ளார்.

இந்த நிலையில், சாய் அபயங்கர் தனது அடுத்த இன்டீ பாடலை வெளியிட்டுள்ளார். “பவழ மல்லி” என தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாடலை விவேக் எழுத, சுருதி ஹாசன் பாடியுள்ளார். சாய் அபயங்கர் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

Source link