சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
2025-2026-ம் ஆண்டு இரண்டாம் போக பாசனத்திற்கு, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து, காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 10.11.2025 முதல் 09.03.2026 வரை 120 நாட்களுக்கு மொத்தம் 5184.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டது.
இதனை தொடர்ந்து, மேலும், 10.03.2026 முதல் 31.03.2026 முடிய 22 நாட்களுக்கு பாசன காலத்தை கால நீட்டிப்பு செய்து பவானிசாகர் அணையிலிருந்து 950.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
