பாகிஸ்தானின் வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சியாக உள்ளது – சீன அதிபர் பெருமிதம்.

பெய்ஜிங்,

பாகிஸ்தான் தனது தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் காட்டும் உறுதியை சீன அதிபர் ஷி ஜின்பிங் பாராட்டி உள்ளார். மேலும் அந்நாட்டின் சமூக மேம்பாட்டு சாதனைகளை கண்டு சீனா “மனதார மகிழ்ச்சி” அடைவதாக தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் பாகிஸ்தான் இடையேயான தூதரக உறவுகள் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைகி்றது. பாகிஸ்தான் தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு, சீன அதிபர் ஷி ஜின்பிங் வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், தனது நெருங்கிய நண்பனான பாகிஸ்தானின் சாதனைகளைக் கண்டு சீனா மனதார மகிழ்ச்சி அடைகிறது என்றும், இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு எப்போதும் பெய்ஜிங் துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபரான பிறகு, பாகிஸ்தான் தனது வெளியுறவு கொள்கையில் மாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் அமெரிக்காவுட்னான நட்பு சீனாவின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களுக்கு சவாலாக இருக்கும் என சீனா கருதுவதாக தெரிகிறது.

தங்கள் நிண்ட கால திட்டத்திற்காக பாகிஸ்தானில் இருந்த சீன பணியாளர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் திடீரான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதில் பல சீன பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது. சீனாவை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அவர்களுக்குப் பாகிஸ்தான் சரியான பாதுகாப்பு வழங்குவாதில்லை என்று சீனா நேரடியாகவே விமர்சித்துள்ளது.

இத்தனை கசப்பான சம்பவங்கள் மற்றும் பிளவுகள் குறித்த பேச்சுகள் இருந்த நிலையிலும் அதிபர் ஷி ஜின்பிங் “பாகிஸ்தான் சாதனைகளை கண்டு மனதார மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியிருப்பது ஒரு முக்கியமான ராஜதந்திர நகர்வாகும். இதன் மூலம் பாகிஸ்தான் முழுமையாக மீண்டும் தன் பக்கம் ஈர்க்கும் ஒரு முயற்சியாகும். பாகிஸ்தான் சீனாவை சார்ந்திருப்பதால், அவற்றின் உறவுகள் வலுவாக உள்ளதாக கூறப்படுகிறது.

Source link