பாகிஸ்தானில் பொதுப் போக்குவரத்து இலவசம்

இஸ்லாமாபாத்,

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நாடுகளில் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் அடுத்த 30 நாட்களுக்கு பொதுப் போக்குவரத்துகள் இலவசமாக இயக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மத்திய கிழக்குப் போரால் அந்நாட்டில் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Source link