கொழும்பு,
இந்திய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா, வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் இரண்டு நாள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனால் நமிபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. அவர் மிகவும் பலவீனமாக இருக்கிறார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் அபிஷேக் சர்மா விளையாடமாட்டார் என்று தெரிகிறது. இதனை சூசகமாக தெரிவித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ‘அபிஷேக் ஷர்மா இன்னும் முழுமையாக தேறவில்லை. அதனால் அவர் ஒன்றிரண்டு ஆட்டங்களை தவறவிடுவார்.’ என்று குறிப்பிட்டார். அபிஷேக் சர்மா விளையாடாத பட்சத்தில், சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறுவார் என்று தெரிகிறது. நமிபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் சர்மாவுக்கு பதில் சஞ்சு சாம்சன் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
