எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை பேசியிருந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயல் இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். இதன் பின்னணி என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
அதிமுக பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு விவகாரம்
ஆலோசனையில், தற்போதைய திமுக கூட்டணியில் அரசியல் நிலை குறித்தும், பிரச்சார நடவடிக்கைகள் குறித்தும், எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.இந்த நிலையில் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார்.அதிமுக உடனான தொகுதி பங்கீடை இறுதி செல்வதற்காக வருகை தந்துள்ள அவரை, மத்திய இணை அமைச்சர் முருகன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தர ராஜன், பொன் ராதாகிருஷ்ணன் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக அரசு மீது மக்கள் விரக்தி மற்றும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறினார்.
தனித்து போட்டியிடும் TVK, NTK & கூட்டணியுடன் களம் இறங்கும் DMK, ADMK! யாருக்கு வெற்றி🏆
பியூஷ் கோயல் சென்னை வருகை
தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான அரசு வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என தமிழ்நாடு மக்கள் விரும்புகின்றனர். மேலும் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடு சுமுகமாக நடைபெறும். மேலும் தொகுதியில் உடன்பாடு தொடர்பான நல்ல செய்தி எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறினார்.
கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் அமர்ந்து பேசி தொகுதி பங்கீடு விவரங்கள் குறித்து அறிவிப்போம் அனைவரும் மகிழ்ச்சி மற்றும் திருப்தி அடையும் வகையில் தொகுதி பங்கீடு அமையும் என்றும் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல உள்ளார். இந்த சந்திப்பில், தமிழகத்தில் பாஜகவுக்கு சுமார் 25 முதல் 28 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பாஜக தரப்பு விருப்பமாக தொகுதிகள் எவை?
குறிப்பாக என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. ஆனால் தொகுதிகள் ஒதுக்குவதில் தான் சிக்கல் நீடித்தது. அதன்படி, சென்னை நகரில் உள்ள வேளச்சேரி, மயிலாப்பூர், தியாகராய நகர் போன்ற முக்கிய நகர்ப்புற தொகுதிகளை பாஜக தரப்பு விருப்பமாக கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொகுதிகள் நகர்ப்புற வாக்காளர்கள் அதிகம் உள்ள பகுதிகள் என்பதால், அவற்றை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மற்றொரு புறம், அதிமுக சார்பில் தொகுதி பங்கீடு தொடர்பாக முன்னதாகவே ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.இந்த குழு, கூட்டணியில் உள்ள அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி, இறுதி ஒப்பந்தத்தை உருவாக்கும் பணியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழக அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
