பாஜக கணக்கு சரியா? அதிமுக பலம் உள்ள அவிநாசியில் எல். முருகன்!யாருக்கு வெற்றி? – l. murugan to contest the 2026 assembly election from avinashi on behalf of the bjp

2026 சட்டமன்ற தேர்தலுகான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் அவினாசியில் எல்.முருகன் போட்டியிட உள்ளார்.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எல். முருகன்(புகைப்படங்கள்Samayam Tamil)
சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக தரப்பில் இதுவரை வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இதற்கு காரணம், அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று தெரிவித்ததாகவும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பாஜக முக்கிய புள்ளிகள் அண்ணாமலையுடன் ஆலோசனை நடத்தி சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டால், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கவேண்டும் என்பதில் அண்ணாமலை உறுதி என தகவல் வெளியானது.

2026 சட்டமன்ற தேர்தல் களம்

இதனால்,பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் இழுப்பறி நீடித்து வந்த நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, மத்திய இணையமைச்சர் எல். முருகன் அவிநாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளார்.

  • கடந்த 2011 ஆம் நடந்த சட்டமன்ற தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு எல். முருகன் தோல்வி அடைந்தார்.
  • இதனைத் தொடர்ந்து, 2021 தேர்தலிலும் தாராபுரம் தனி தொகுதியில் எல். முருகன் வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.

திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?

எல் முருகன் அவிநாசி தொகுதி வேட்பாளர்
  • திமுக வேட்பாளர் கயல்விழியை விட 1,393 வாக்குகள் குறைவாக பெற்று, பாஜக வேட்பாளர் எல். முருகன் தோல்வியடைந்தார்.
  • கயல்விழி மொத்தமாக 89,986 வாக்குகள் பெற்றார்.ஆனால், எல். முருகன் 88,593 வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தார்.
  • இதனைத் தொடர்ந்து, கடந்த 2024 நடந்த நாடாளுமன்ற தேர்தலில்,நீலகிரி தொகுதியில் திமுக சார்ப்பில் போட்டியிட்ட ஆ. ராசாவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
  • இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் எல்.முருகனுக்கு அவிநாசி தனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அவிநாசி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை அதிமுக பலம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது.

சிட்டிங் எம்.எல்.ஏ தனபால் அதிருப்தி

கடந்த தேர்தல்களில் தனபாலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு எம்.எல்.ஏவாக தேர்வானார். இந்த முறை அவிநாசி தனி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த நிலையில் அந்த தொகுதி பாஜக வசம் சென்றது.இதனால் சிட்டிங் எம்.எல்.ஏ அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.இவரது மகன் லோகேஷ் தவெகவில் இணைந்தார்.அவர் ராசிபுரம் தவெக வேட்பாளராக களமிறக்கப்பட்டு உள்ளார்.கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற திமுக தீவிர களப்பணியில் ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில், அவிநாசி தனி தொகுதியில் திமுக சார்பில் இளம் மருத்துவர் கோகிலாமணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதே போல் நாதக சார்ப்பில் மேனகாவும், தவெக சார்ப்பில் கமலி வேட்பாளராக நிறுப்பட்டு உள்ளார்.

அவிநாசி தனி தொகுதி களநிலவரம்

அவிநாசி தனி தொகுதியில் 2,50,346 வாக்காளர்கள் உள்ளனர்.இந்த தொகுதியில், அதிமுக 8 முறை போட்டியிட்டது. அதில் 5 முறை வெற்றி பெற்று உள்ளது. அதிமுக நேரடியாக இறங்கியிருந்தால் கூடுதல் பலமாக இருந்து இருக்கும். அதிமுக செல்வாக்குடன் பாஜக களமிறங்குகிறது.எல்.முருகன் நன்கு அறிந்த முகம், முன்னாள் மாநிலத் தலைவர், மத்திய இணையமைச்சர் உள்ளிட்ட பதவியில் இருந்துள்ளார்.
இவை அனைத்தும் எல்.முருகனுக்கு சாதகமான அம்சங்களாக பார்க்கப்படுகிறது.குறிப்பாக இந்த தொகுதியில் அருந்ததியர் சமூக மக்கள் அதிகம், அடுத்து கவுண்டர்கள், நாயக்கர் மற்றும் இதர சமூகத்தினரும் பரவலாக இருக்கின்றனர்.எல்.முருகனுக்கு அதிமுக தேர்தலில் தரும் ஒத்துழைப்பு முக்கியமாக பார்க்கப்படுகிறது.இதை பொறுத்து வெற்றி உறுதியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.